தன்னறிவிப்பு: வேலை, வாசிப்பு, கொஞ்சம் எழுத்து.

இப்பக்கம் என்னுடைய தற்போதைய வாழ்க்கைப்பாதையின் நீண்ட கால அலகைச் சுருக்கி எழுதப்பட்டது.

  • இரு மகள்கள். முதலாமவள் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கிறாள். நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.
  • வலைதளங்கள் வடிவமைப்பது குறித்து https://www.pineboat.in/ என்னும் தளத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது தேங்கி நிற்கிறது.
  • தீவிர இலக்கிய வாசகன். ஜெயமோகன் எழுதிய வெண்முரசு வாசித்து முடித்தது ஒரு பெரும் முன்னகர்வு. இப்புவியில் எழுதப்பட்ட மிக நீளமான நவீன செவ்வியல் நாவல். தமிழ் வாசிக்க முடியுமென்றால் அவசியம் வாசிக்கவேண்டிய படைப்பு.
  • இத்தளத்தில் நான் வாசிக்கும் நூல்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
  • ஃப்ரஷ்வொர்க்ஸ் எனும் நிறுவனத்தில் பொறியியல் மேலாளர். ஆயிரக்கணக்கிலான வாடிக்கையாளர்களின் நாட்களை சீரான மென்பொருள் வழியே இனிதாக்கும் பொறுப்பு என்னுடையது.

கடைசியாக ஜனவரி 2022ல் இப்பதிவு மாற்றி எழுதப்பட்டது.

இப்பகுதி குறித்த சிறு அறிமுகம், ஆர்வமுள்ளோர் வாசித்துப்பார்க்கலாம், ஆங்கில வடிவம் மட்டுமே உள்ளது. “தற்போதைய” வாழ்க்கைப்பாதையை எழுதுபவர்களின் தொகுப்பு, மற்றும் இது ஏன் ஆரம்பித்து வைக்கப்பட்டது என ஒரு விளக்கம்.